Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கொண்ட சாலடுகளை உட்கொள்வது கொரோனா காலத்தில் பாதுகாப்பானதா?

கொரோனா வைரஸ், உணவின் மேற்புறங்களில் வாழும் தன்மை கொண்டது என சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் நல்ல சுகாதாரமான நடைமுறைகளை எவ்வாறு பராமரிப்பது?

ஆரோக்கியமான உணவுகளையும், சாலடுகளையும் உண்பது என்பது பலரது அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நம்மில் பலரும் சொந்த சமையலுக்கு மாறி, சாலடுகளை உண்பதைத் தவிர்த்து வீட்டில் துரித உணவுகளை செய்ய முயல்கிறோம். கோவிட்-19 உணவின் மேற்புறங்களிலும் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பழங்கள், காய்கறிகள், பேக் செய்யப்படாத ரொட்டி, கேக், சாலடு போன்றவற்றில் நல்ல சுகாதார நடைமுறைகளை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இதனால் உணவு மாசுபாட்டைக் குறைக்க இயலும்.

பதனிடப்படாத உணவுகளை உண்ணலாமா?

தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகளுள் ஒன்று, பதனிடப்படாத உணவுகளையும், பழங்கள் காய்கறிகள் மற்றும் சாலடுகளையும் உண்ணலாமா? என்பதுதான்.

ஆம் உண்ணலாம். ஆனால் உங்களுடைய கைகளை உணவுண்ணும் முன் நன்கு கழுவ வேண்டும். அதோடு பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நன்கு கழுவ வேண்டும். இதோ உணவு மாசுபாட்டைக் குறைக்க சில பரிந்துரைகள்.

1. உணவு வாங்கும் போது மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

வீட்டை விட்டு வெளியில் பொருட்கள் வாங்க செல்லும் முன் நினைவில் வைக்க வேண்டிய சில குறிப்புகள்:

  • தேவைப்படும் போது மட்டுமே மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே செல்ல வேண்டும்.
  • பொருட்களின் பட்டியலை முன்னரே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • உங்களுக்கென்று சொந்தமான பையை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • மக்கள் கூட்டம் குறைவான கடையையும், சரியான நேரத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • வாங்கிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.
  • சில குறிப்பிட்ட ஆடை மற்றும் செருப்புகளை இதற்கென்றே தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடையிலிருந்து திரும்பிய பிறகு உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும்.

2. கடையில் இருக்கும்போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்புகள்:

  • சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • வாங்க விரும்பும் பொருட்களை மட்டுமே தொட வேண்டும்.
  • பொதுவான இடத்தை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்களுடைய கண், வாய், மூக்கு போன்றவற்றை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வண்டி அல்லது கூடையின் கைப்பிடிகளை பயன்படுத்தும் முன் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

3. வீட்டிற்கு வந்தவுடன் பின்பற்ற வேண்டிய படிகள்:

  • வீட்டிற்குள் வரும்முன் காலணிகளை வெளியே கழற்ற வேண்டும்.
  • தனிமையான இடத்தில் பைகளை வைக்க வேண்டும்.
  • 20 நொடிகளுக்குக் குறையாமல் கைகளை சோப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • குளித்து, துணிகளை மாற்ற வேண்டும்.
  • பையிலிருந்து உணவை எடுத்து தனியாக வைக்க வேண்டும்.
  • வெளியிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை நேரடியாக சமையலறைக்கு கொண்டு செல்லக் கூடாது.
  • உணவு பைகளை கையாண்ட பிறகு, மறுபடியும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • ஒருவேளை கையுறைகளை காய்கறிகள் மற்றும் பழுங்களை வாங்க  பயன்படுத்தியிருந்தால் வீட்டிற்கு வருமுன் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

4. பழங்கள் மற்றும் காய்கறிகளை கையாளும்போது மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

உணவுப் பயன்பாட்டில் நினைவில் கொள்ள வேலண்டிய குறிப்புகள்:

  • காய்கறிகளை வெட்டுவதற்கு மற்றும் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் கழுவ வேண்டும். அவை மளிகைக் கடையிலோ, விவசாய சந்தையிலோ அவை ஆர்கானிக் முறையில் வளர்க்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
  •  சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி காய்கறிகளை கழுவி சுத்தம் செய்யும் போது சோப்பு நுரைகளை முழுவதுமாக நீக்க வேண்டும். இது மிகவும் கடினமானதாகும். சில சமயம் இவை தட்டுகளின் மேற்புறங்களிலும் அடிக்கடி காணப்படும். எனவே காய்கறிகளின் மேற்புறங்களிலிருந்து சோப்பை நீக்குவது மிகவும் கடினமானதாகும். அதை முழுவதும் செய்ய வேண்டும்.
  • புராகோலி, கீரை போன்றவற்றை சாப்பிடுவதற்கு முன்பாக குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கனிகளை கழுவாமல் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் போது ஈரத்தன்மை அதிகரித்து கெட வைக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தூண்டுகிறது
  • வாங்கி வந்தவுடனே காய்கறிகள் கழுவப்படவில்லையெனில், அவற்றை மூடிய பகுதியில் 3 முதல் 4 மணிநேரத்திற்கு அப்படியே வைத்திருக்க வேண்டும்.

புதிய தயாரிப்பகள் பெரும்பாலும் சமைக்காமலேயே உண்ணப்படுவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையே உணவு பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள புதிய பொருட்களை சாப்பிடுவதற்கோ அல்லது சமைப்பதற்கோ முன்பு மட்டும் கழுவுதல் கூடாது. மாறாக சமைத்த முன்பும் பின்பும் 20 நிமிடங்களுக்கு மிகாமல் வெதுவெதுப்பான நீரில் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

Categories

Tech |