விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த மாதம் 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு நேற்றைய எபிசோடில் புதிதாக செரினா நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேசும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கண்டிப்பாக அவர்கள் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதன் பிறகு நடிகை ஆயிஷா மற்றும் செரினா ஆகியோர் வீட்டிற்குள் வேறு மொழிகளில் பேசியுள்ளனர்.இதனால் நடிகர் கமல்ஹாசன் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நான் தற்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் இப்ப விஜய் டிவியிடம் சண்டை போடலாம் என்று இருக்கிறேன். இது மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியாக மாறிட்டு வர்றதனால நான் டபுள் சம்பளம் கேட்க போகிறேன். அப்போதுதான் அவங்களுக்கும் பதட்டமான சூழ்நிலை புரியும் என்று கூறினார். மேலும் செரினா வீட்டை விட்டு வெளியேறும்போது அவரிடம் கமல் மலையாளத்தில் பேசியதோடு ரசிகர்களுக்கு மலையாளத்தில் நன்றி சொல்லிவிட்டு வெளியேறுமாறு கூறினார்.