நடிகை நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி செலுத்தி கொண்டாரா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவும், அவரது காதலனும், பிரபல தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதில் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் பலர் அந்த நர்ஸ் கையில் ஊசியே இல்லை என்றும், நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி செலுத்தி கொண்டாரா அல்லது அப்படி போஸ் மட்டும் கொடுத்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.