தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிஷாவிடம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்காதது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு நடிகை திரிஷா கூறியதாவது, அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது அப்பவே முடிந்து விட்டது. ஒரு விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று நினைப்பதற்கு தெளிவான காரணம் இருக்கிறது என்றார். அதன் பிறகு எனக்கும் நயன்தாராவுக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டியாக பார்த்தால் அது நல்லது. அது நல்ல விஷயம். ஆனால் ஒருவரை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான் கேவலமான விஷயம். அது நானாக இருந்தாலும் சரி. மற்ற நடிகைகளாக இருந்தாலும் சரி. மேலும் நயன்தாரா உட்பட வேறு எந்த நடிகைகளுடனும் எனக்கு பெரிய அளவில் நட்பு இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.