Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜா மும்பை அணியிலா? அதுக்கு வாய்ப்பில்ல ராஜா – சிஎஸ்கே நச் பதில்

கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே வீரர் ஜடேஜா குறித்து எழுப்பிய கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தடாலடியான பதிலை அளித்துள்ளது.

ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா நடைபெறுவது போன்ற உணர்வு அனைவரிடத்திலும் தொற்றிக்கொள்வது வழக்கம். காரணம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் உலகின் பல அதிரடி வீரர்களும் கலர் கலரான ஜெர்சியை அணிந்துகொண்டு கலக்குவர்.

இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு பிற வீரர்களை விடுவித்தது. இதில் சென்னை அணியிலிருந்தும் ஐந்து வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே ஐபிஎல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் விளையாட்டாக ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அவர் சென்னை அணியில் உள்ள ரவீந்திர ஜடேஜா மும்பை அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இது நடக்காத விஷயம் என்று பதிலளித்து பதிவிட்டது.

jadeja

ஐபிஎல் தொடரில் முதலில் ராஜஸ்தான் அணியில் தனது பயணத்தை தொடங்கிய ரவீந்திர ஜடேஜா பின்னர் 2012ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சென்னை அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துவருகிறது. அது மட்டுமல்லாது பல போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார் ஜடேஜா. இம்முறையும் அதனாலேயே அவரை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துள்ளது.

Categories

Tech |