காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அடுத்து இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த இவர் ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகி இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இந்தப் திரைப்படங்களில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அவர் கர்ப்பமாக உள்ளாரா என ரசிகர்களிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும், காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் இது பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.