Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்2’ உருவாகிறதா… தயாரிப்பாளரே சொல்லிட்டாரு… வெளியான சூப்பர் தகவல்…!!!

கர்ணன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த முதல் படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டாக மாரிசெல்வராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார்.

குறிப்பாக கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றது. இதனால் கர்ணன் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதைத்தொடர்ந்து பல ரசிகர்கள் கர்ணன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று சமூக வலைத் தளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் இந்த வீடியோ கர்ணன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மேக்கிங் வீடியோ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கர்ணன் 2 உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |