பிரிட்டன் நாட்டின் மன்னராக அறிவிக்கப்படும் அதிகாரபூர்வமான நிகழ்வில் மேசையை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அரசர் சார்லஸ் சமிக்ஞை காட்டி பேசியதை, கோபமாக பேசியதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
பிரிட்டன் நாட்டை 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வில் அவர் கோபமாக நடந்துகொண்டதாக கூறப்பட்டிருக்கிறது.
Charles covers up breaking wind at his accession by wafting and blaming the pen tray and ink for the eh, pen and ink. pic.twitter.com/ZfW3cNPMIN
— DimEagleBuckie 🏴🌱🇪🇺 🥃🍷🚲 (@BuckieDim) September 10, 2022
அதில் ஆவணங்களில் கையொப்பமிடும் முன், அது வைக்கப்பட்டிருந்த மேசையில் இருக்கும் ஒரு பொருளை எடுக்குமாறு, ஊழியர்களிடம் மன்னர் சார்லஸ் சைகை மூலம் தெரியப்படுத்துகிறார். ஆனால், அதில் அரசர் கோபப்பட்டிருக்கிறார் என்று பலரும் கருதுகிறார்கள். ஒரு சிலர் அதனை நகைச்சுவையாக பார்த்திருக்கிறார்கள்.