தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிபடையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து ஜல்லி, கிரஷர், மற்றும் பாறை பொடிகளை கட்டுமான பணிகளுக்காக கேரளாவிற்கு ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் அள்ளி செல்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது ஒப்புதல் சீட்டில் உள்ள அளவுகளை விட அதிகமாக ஜல்லி, பாறை பொடிகளை ஏற்றி செல்வதாகவும், ஜாலிக்கு நடுவே எம்-சாண்ட் மணலும் கடத்தபடுவதாக மாவட்ட புவியியல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் கம்பம் புறவழி சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக கேரளாவிற்கு ஜல்லி போன்றவை ஏற்றி செல்லும் லாரிகளை நிறுத்தி ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஜல்லி கற்களை தோண்டி எம்-சாண்ட் மணல் கடத்த படுகின்றதா என சோதனை செய்த பின்னரே லாரிகளை அனுப்பு வைத்துள்ளனர். மேலும் கேரளாவுக்கு எம்-சாண்ட் மணல் கடத்தபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.