இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே கொழும்பு நகரிலிருந்து எப்படி தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
நெருக்கடி அதிகரித்ததால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்ற சில அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்திய தூதரகம் இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. ஆனால், திரிகோணமலையின் ஒரு தீவில் மஹிந்த ராஜபக்சேவின் குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கொழும்பு நகரிலிருந்து அவர் தப்பிச்செல்ல இராணுவத்தினர் உதவி செய்திருக்கிறார்கள். இதற்கு அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ அனுமதி அளித்ததாக கூறப்பட்டிருக்கிறது. அலரி மாளிகையிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ, வெளியேறி, சீன நாட்டு நிறுவனத்திற்குரிய ஷங்கீரிலா என்ற ஓட்டலில் தங்கியிருந்துள்ளார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக திருகோணமலைக்கு சென்றிருக்கிறார். மஹிந்த ராஜபக்சேவும் அவரின் குடும்பமும் கொழும்பு நகரிலிருந்து ஹெலிகாப்டர் வழியாக சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.