Categories
தேசிய செய்திகள்

நிஜமாவா?… “பிளைட்ல இதை செய்யலாமா” ?… விமானத்துறை அதிரடி அறிவிப்பு…!!

விமானங்களில் செல்லும்பொழுது ஸ்மார்ட்போன்களை wi-fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என விமானத்துறை தெரிவித்துள்ளது.

விமானங்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயம் மொபைல் போன்களை ஃப்ளைட் மோடில் போட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது அதில் சிறிய ஒரு விலக்கு கொடுத்துள்ளது விமானத்துறை அமைச்சகம். அதாவது விமானங்கள் 3000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளை wi-fi மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை ஃபிளைட் மோடில் தான் பயன்படுத்த வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் பயணிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த முடிவு குறித்த வரைவு விதிமுறைகள் தொடர்பான கருத்துரைகளை முப்பது நாட்களுக்குள் அனுப்பும்படி  விமானத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |