செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பொறந்த நாங்க சொல்லுறோம். வாய மூடிட்டு, பேசாம இருக்கணும். இல்லனா உன் மனுதர்மத்தை மறுவாசிப்பு செய், இதுல எழுதி இருக்கு. அதை தான் ஆ.ராசா பேசுறாரு. சும்மா தேவையில்லாம ஏதாவது நோண்டிக்கிட்டு இருக்காத. உனக்கு அரசியலில் ஒரு எழவும் கிடையாது.
மலைய வெட்டிக் கொண்டு போய்கிட்டு இருக்கான், மணலை அள்ளி தின்னுகிட்டு இருக்கான், தண்ணி உறிஞ்சி வித்துக்கிட்டு இருக்கான், எல்லாத்தையும் தனியார் மையப்படுத்திக்கிட்டு மோடி வித்துக்கிட்டு இருக்காரு. என்னத்தையாவது பேசி நகைச்சுவை பண்ணிக்கிட்டு இருக்காரு. யோவ் அவரு சொல்லலையா, இப்படி சொல்லி இருக்குன்னு திருப்பி சொல்றாரு.
மோடியே திராவிடர் என எச்.ராஜா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், இப்போ பார்த்தீங்களா திராவிடம் எவ்வளவு கேவலமா இருக்குன்னு. திராவிடம் என்பது எம்புட்டு கேவலமானது என்பதை இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க. இனிமே திராவிடத்தைப் பற்றி நீங்கள் பேசாம இருங்க. அது ஒரு வேடிக்கை. என் பங்காளி வடிவேலு காமெடியை விட வேடிக்கையான காமெடி என தெரிவித்தார்.