தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்த நிலையில், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், வாடகை தாய் மூலமாக குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது.
கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், நயன்-விக்கி தம்பதி மட்டும் எப்படி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வாடகைத்தாய் யார் என்ற தகவலை ரகசியமாக வைத்திருந்த நிலையில், தற்போது வாடகைத்தாய் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நயன்தாராவின் அண்ணன் துபாயில் வசித்து வருகிறார். இவருடைய ஏற்பாட்டின் பேரில் நயன்தாராவின் உறவினர் ஒருவர்தான் வாடகை தாயாக இருந்துள்ளார் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.