Categories
மாநில செய்திகள்

100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையத்திற்கு எண்ணமில்லையா ..? நீதிமன்றம் கேள்வி…!!

தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது அந்த நேரத்தில்  தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திர திருவிழா 27ம் தேதி வரை நடைபெறும் . மதுரை மக்களவை தேர்தல் தேதியை இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் .

அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது இந்திய தலைமை தேர்தல் தேர்தல் ஆணையம்  தெரிவிக்கையில்  ஏற்கனவே மதுரை மாவட்ட நிர்வாகத்திடமிருந்தும் .  காவல் ஆணையரிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டபின்பு தான் தேர்தல் தேதி அறிவித்ததாகவும் , இனிமேல் தேதி மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றும் மற்றும் தேவையான பாதுகாப்பு பணிகளை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டது .

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீத வாக்குப்பதிவு நடப்பதில் ஆர்வம் இல்லையா என்ற கேள்வி எழுப்பினார் . தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் குறைந்தது  5 லட்சம் பேர் வருவார்கள் அப்போது காவல்துறை அவங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமா ?  , மக்கள் வாக்குச்சாவடிக்கு விரைவில் எளிதாக சென்று வர வேண்டாமா ? தென் மாவட்டத்தில் இருந்து பல பேர் வருவார்கள் எனவே  தேர்தல் கமிஷன் மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறி  தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்குமாறு வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .

Categories

Tech |