ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள சஹேலின் மேற்கில் அரசு படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்கொய்தா இயக்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதனால் எப்போதும் அந்த பகுதி பதற்றத்துடன் காணப்படும். இந்த நிலையில் நைஜரில் உள்ள புர்கினோ பாசோ மற்றும் மாலி நாடுகளின் எல்லைப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலானது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலானது தில்லாபெரியின் மேற்குப் பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அதாப் டாப் என்ற கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி நடந்துள்ளது. இது பற்றிய தகவலானது தற்பொழுது வெளிவந்துள்ளது. அதில் “தாக்குதல் நடந்த அன்று மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அதே போன்று மோட்டார் சைக்கிளில் வந்த கிரேட்டர் சகாரா பகுதியை சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரை தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து ஒருவருக்கொருவர் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் முக்கியமாக பானிபங்காவ் நகர மேயரும் உயிரிழந்துள்ளார். குறிப்பாக இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.