திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அருந்ததி, பாகமதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகை அனுஷ்கா ஐதராபாத் விமானநிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா உடல் எடை அதிகரித்த தோற்றத்தில் காணப்படுகிறார்.