பேரன் ஒருவர் தன்னை பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன்- ராஜேஸ்வரி. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மேலும் தன்னுடைய மகன் மற்றும் மகள் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் பாபு என்பவருக்கு ராகேஷ் என்ற பேரனும் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சம்பவத்தன்று தன்னுடைய வீட்டில் பிரியாணி செய்துள்ளார். இதனால் தன்னுடைய பேரன் மற்றும் பேத்திகளுக்கு பிரியாணி சாப்பிட கொடுத்துள்ளார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை? ராகேஷை மட்டும் அவர் சாப்பிட அழைக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் வீட்டிற்கு வந்து தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டி இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சண்டை முற்றியதால், ராகேஷ் தன்னுடைய பாட்டியை பிடித்துத் சாலையில் தள்ளியதால் தலை அடிபட்டு சம்பவ ராஜேஸ்வரி இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாட்டியை கொலை செய்த பேரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.