Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அற்புத சுவை கொண்ட ”சில்லி பெப்பர் பரோட்டா” ரூசி பிண்ணுதா ? 

தேவையான பொருட்கள்:

பரோட்டா -4,

பெரிய வெங்காயம் – 2,

குடமிளகாய் 1,

சில்லி சாஸ் 1 ஸ்பூன்,

தக்காளி சாஸ் 2 ஸ்பூன்,

சோயா சாஸ் 1 ஸ்பூன்,

மிளகாய் தூள் அரை ஸ்பூன்,

மிளகு தூள் 1 ஸ்பூன்,

உப்பு, எண்ணெய், கொத்தமல்லி, தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் குடை மிளகாய் போட்டு வதக்கவும். இதையடுத்து பாதி வதங்கியதும் சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகாய்த்தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.அதன் பின் வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.அத்துடன் வெட்டி வைத்திருந்த புரோட்டா சேர்த்து கிளறி கொத்தமல்லி போட்டு இறக்கி விடவும். இதை தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

Categories

Tech |