Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இ- பாஸ் ரத்தாகுமா?”… முதலமைச்சர் ஆலோசனை…!!

தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் சில தளர்வுகளை கொடுக்க வேண்டும் என்றும் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர்களான மு க ஸ்டாலின், மற்றும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரியில் நேற்று இ – பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் இ -பாஸ் முறையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு இ- பாஸ்க்கு பதிவு செய்யும் அனைவருக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதைப்போல்  லட்சக்கணக்கான  இ- பாஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு, மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கக்கூடாது என அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இ- பாஸ் முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Categories

Tech |