தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் என்பது இன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மதுரையில் தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டம் என்பது தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு போகவும், இடைநிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பேரில் இந்த திட்டம் என்பது தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பிரிவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையிலேயே தற்போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி வேலைநாட்களில் காலை வேலைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சியில் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் இருக்கக்கூடிய ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தான் இந்த திட்டம் என்பது தற்போது தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கு இருந்த குழந்தைகளுக்கு உணவை பரிமாறிய முதல்வர் மு.க ஸ்டாலின், அவர்களுடன் தரையில் அமர்ந்து உணவை உட்கொண்டு, குழந்தைகளோடு சாப்பிட்டார். மேலும் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்ட ஸ்டாலின், உணவு நன்றாக இருக்கிறதா என்றும் கேட்டார்.