துப்பாக்கி பட வில்லன் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜமால் வில்லனாக நடிக்க உள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதனை வித்யூத் ஜமால் மறுத்துள்ளார். மேலும் “ஐ அம் வெயிட்டிங்” என துப்பாக்கி பட பாணியில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.