Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் “இதை செய்தாரா?” .. வைரலாகும் புகைப்படம்

அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் மீது சர்ச்சை எழுந்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களுக்கான வாக்குகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். அதில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொழுது முகக்கவசம் எதுவும் அணியாமல் தனிநபர் இடைவெளியைக் பின்பற்றாமல் இருந்ததாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது.

வைரலான புகைப்படங்களை ஆய்வு செய்து பார்த்தபோது அந்த புகைப்படம் மார்ச் 9ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதத் துவக்கத்தில் தான் ஊரடங்கு, முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் இந்த கூட்டம் அதற்கு முன்னதாக நடைபெற்று உள்ளதாக தெரியவந்துள்ளது.  இதனால் வைரலாகி வந்த புகைப்படங்கள் வதந்தியே என்று நிரூபணமாகி உள்ளது. போலி செய்திகளை  பரப்பாதீர்கள் அது பல பிரச்சினைகளை கொண்டு வரும்.

Categories

Tech |