Categories
தேசிய செய்திகள்

“ஊருக்கு மட்டும் தான் உபதேசமா”…. இலவச சிலிண்டர், சைக்கிள், Etc,…. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் பாஜக…..!!!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகிற ‌ 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு முதல்வராக ஜெய்ராம் தாகூர் இருக்கிறார். அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு தங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர். இம்மாநிலத்தில் ஜனவரி 8-ம் தேதியுடன் ஆட்சி நிறைவுபெறும் நிலையில், டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 10-ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ‌ அதன்படி காங்கிரஸ் 16 வயது முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் 1500 உதவித் தொகையும், 300 யூனிட் இலவச மின்சாரமும், ஒரு வீட்டுக்கு 4 மாடுகள் மானியத்தில் வழங்கப்படும் என்று பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்துள்ளது.

இதேபோன்று பாஜக அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு திருமணத்தின் போது வழங்கப்படும் உதவித்தொகை ஆனது 31 ஆயிரத்தில் இருந்து 51,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச சைக்கிளும், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டியும், 12-ம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் 5000 மாணவர்களுக்கு மாதம் 2500 நிதி உதவியும், கர்ப்பிணி பெண்களுக்கு 25 ஆயிரம் உதவித்தொகையும், 3 சிலிண்டர்கள்  இலவசமாக வழங்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

பாஜகவின் இந்த தேர்தல் வாக்குறுதி தற்போது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அதாவது பிரதமர் மோடி அவர்கள் இலவச திட்டங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் கூறிவரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் பாஜக கட்சியின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இலவச திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு கூட தொடர்ந்தார். இப்படி பாஜக இலவச திட்டங்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால் இமாச்சல் பிரதேசத்தில் இலவச வாக்குறுதிகளை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் ஊருக்கு மட்டும் தான் உபதேசமா உங்களுக்கு கிடையாதா என்று விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் இலவசங்களை கொடுக்கக்கூடாது என்று கூறுவார்கள் ஆனால் குஜராத்தில் மட்டும் இலவசங்களை கொடுப்பார்கள். மேலும் ‌ பாஜக காலையில் பேசுவது மாலையில் இருக்காது என்றும் திமுக விமர்சித்துள்ளது ‌

Categories

Tech |