Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டை தொலைந்து விட்டதா…? இனி புதுசு வாங்குறது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா…??

வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். வாக்காளர் அட்டை தொலைந்து விட்டாலும் அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும் டுப்ளிகேட் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களோடு தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நமது டூப்ளிகேட் அட்டை வழங்கப்படும். முன்பெல்லாம் டூப்ளிகேட் அடையாள அட்டை வாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாக ஈசியாக டுப்ளிகேட் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

அந்தந்த மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலிருந்து டூப்ளிகேட் வாக்காளர் அட்டையை வழங்குவதற்கான விண்ணப்ப படிவமான Form EPIC-002 நகலைப் டவுன்லோடு செய்ய வேண்டும்.

இந்தப் படிவத்தை நிரப்பி எஃப்.ஐ.ஆர் நகல், முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

இதையடுத்து நிரப்பப்பட்ட இந்த விண்ணப்ப படிவத்தை உங்களது உள்ளூர் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

அதன் பிறகு உங்களுக்கு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த நம்பரை பயன்படுத்தி மாநில தேர்தல் அலுவலக வலைத்தளத்தில் உங்களுடைய விண்ணப்ப நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.

விண்ணப்ப படிவத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் அது தேர்தல் அலுவலகத்தால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு முடிந்த பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

இதையடுத்து நீங்கள் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று உங்களது டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

Categories

Tech |