Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுள் இருக்காரா, இல்லையா ? திமுக கூட்டணிக்கு குஷ்பு சரமாரி கேள்வி…..!!

பெண்களை கொச்சப்படுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு திருமாவளவன் தேவையில்லாத விஷயத்தைப் பேசிஉள்ளார். பெண்களை அவ்வளவு இழிவாக பேசியதற்காக போராட்டம் நடத்தியுள்ளோம். காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் பேசிய குஷ்பு,

பெண்கள் எங்கே மதிக்கப் படுகிறார்களோ ? அங்கே கடவுள் இருப்பார் இருப்பார் ? பெண்களை இழிவுபடுத்துகிறார்களோ அங்கு கடவுள் இருக்க மாட்டார்.  நான் கேட்கின்ற கேள்வி ஒன்று தான். கடவுள் இருக்காரா ? இல்லையா ? மொத்தமாக என்ன சொல்ல விரும்புறீங்க. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோவிலுக்கும் போறீங்க, ஒவ்வொரு மசூதி போறீங்க,  சர்ச் போறீங்க… அப்ப மட்டும் உங்களுக்கு கடவுள் தேவைப்படுது. மத்த நேரம் உங்களுக்கு கடவுள் தேவை இல்ல.  அப்போ ஏன் மக்களை இப்படி ஏமாத்திட்டு இருக்கீங்க என நடிகை குஷ்பு தெரிவித்தார்.

Categories

Tech |