பிரபல சீரியல் நடிகைகள் சண்டையிட்டுள்ளனர் என்று இணையத்தில் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருப்பது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா,யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நாயகிகளாக நடித்து வரும் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் அனைவரும் அவ்வப்போது தாங்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அப்படி எந்த புகைப்படங்களையும் வெளியிடாததால் இவர்கள் சண்டையிட்டுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஆனால் நடிகை ரேஷ்மா இதனை மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தங்களது நண்பர்களுடன் ஒன்றாக இருக்கும் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதனுடன் நாங்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொள்ளவில்லை என்று பேசும் அனைவருடைய அக்கறைக்கும் நன்றி.
நாங்கள் தற்போது ஒன்றாகத்தான் இருக்கிறோம். புகைப்படங்களை வெளியிடாததால் சண்டையிட்டுள்ளோம் என்று அர்த்தம் கிடையாது. இனி இந்தக் கேள்வி கேட்பதை நிறுத்தங்கள். நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.