Categories
லைப் ஸ்டைல்

சிறுநீர் பிரச்சினை இருக்குதா…? இது அருமையான மருந்து…. ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!

சிறுநீரை கட்டுப்படுத்த முடியாதவர்கள் இந்த அத்தி பட்டை கஷாயம் செய்து குடித்தால் பலன் கிடைக்கும்.

அத்தி மரத்தின் பழம், காய், பிஞ்சு ஆகியவை மருத்துவ குணங்கள் உடையவை. இவற்றின் வரிசையில் அத்தி பட்டையும் அடங்கும். அத்தி மரம் ஆலமரம் போல உயர்ந்து வளரக் கூடும். அதிலுள்ள விழுதுகள் நீண்டு வளராது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை, காய், பழம் என அனைத்துமே பயன்படுத்தபடுகிறது. அத்திப்பழத்தின் பலன்களை இப்போது அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பொடியாகவும் வாங்கிக்கொள்ளலாம். சிலருக்கு சிறுநீர் கட்டுபடுத்த முடியாமல் வெளியேறும்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்தவுடனே தானாக சிறுநீர் வெளியேறிவிடும். இதை கட்டுக்குள் வைத்திருக்க அத்தி மரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து பொடியாக்க வேண்டும். பின்னர் இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்க வேண்டும். பின்னர் இறக்கி வடிகட்டி சூடாக இருக்கும்போதே அரை டம்ளர் குடிக்க வேண்டும். இதை காலையிலும் மாலையிலும் 25 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டப்படும். குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இதை முயற்சி செய்யலாம். இருப்பினும் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Categories

Tech |