முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நான் எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை. கலைஞருடைய எழுத்துக்கள், கலைஞருடைய புத்தகம், கலைஞர் எழுதிய நூல் தானே, என்னவேனும்னாலும் பேசலாம் வாங்க என்று கிளம்பி வந்தேன். ஐந்து மணிக்கு தான் புத்தகத்தை எடுத்து வர சொன்னேன். என்னுடைய அலுவலகத்தில் இருந்து புத்தகம் ஐந்து மணிக்கு தான் என் கைக்கு வந்தது, அப்படியே புரட்டி பார்த்துவிட்டு நான் வந்து விட்டேன். வரும்போது பத்திரிகையில் பார்த்தேன்..
வாழ்த்துரை அண்ணன் நக்கீரன் கோபாலன் அவர்களும், திரு. கரு பழனியப்பன் அவர்களும்… அதன் பிறகு புத்தகத்தை வெளியிடுவது நான், பெற்றுக் கொள்வது அருமை நண்பன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். நான் மூன்று மணி அளவில் எழிலரசன் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்தேன். அழைத்து… மாணவர் அணி அமைப்பாளர் தான், நான் இளைஞரணி அமைப்பாளர் தான், இருந்தாலும் அவர் எனக்கு மூத்தவர் தான். நான் அண்ணன் என்று தான் சொல்வேன்.
அவரிடம் சொன்னேன் இதுபோல் அழைப்பிதழில் போட்டு உள்ளீர்கள். அந்த வரிசையில் பேசிவிடலாம். முதலில் நான் பேசி விடுகிறேன், ஏனென்றால் புத்தக வெளியீட்டு விழா. வருபவர்கள் எல்லாம் கண்டிப்பாக ஏதாவது பேசி விடுவார்கள், புத்தகமும் 252 பக்கம்தான் இருக்கிறது. இப்போது அப்படித்தான் நடந்தது.
வரவேற்புரை ஆற்ற வேண்டிய அவரே பாதி புத்தகத்தை படித்து விட்டார், பிறகு கரு.பழனியப்பன் அவரும் ஒரு 10 பக்கம் படித்து விட்டார். கோபாலன் அண்ணன் கொஞ்ச நேரத்தில் மறந்து, புத்தகத்தை அப்படியே படிக்க ஆரம்பித்து விட்டார், ஏனென்றால் ஒவ்வொரு பதிலும் படிக்க படிக்க கைதட்டல் வந்து கொண்டிருக்கிறது, அதனால் அவர் அதை மறந்து விட்டார்.
பிறகு நண்பர் மகேஷிடம் சொன்னேன்… நீங்கள் என்ன பேச போகிறீர்கள் ? ஏதாவது மிச்சம் மீதி இருக்கா என்றேன். இல்லை நான் பத்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன். இரண்டு கேள்வியை முடித்து விடுகிறேன். பள்ளி கல்வி துறை சம்பந்தமாக கலைஞர் பதில் சொல்லி இருக்கிறார், அதை மட்டும் பேசிக் கொள்கிறேன். மிச்சத்தை நீ பேசு என்று சொன்னார். பேசுவதற்கு இங்கே என்ன இருக்கிறது ? எல்லாமே பேசிவிட்டார் என தெரிவித்தார்.