தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை தொடங்குகிறது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அவற்றில் பொதுப்போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, ஷூட்டிங், மால்கள், பூங்காக்கள், இவற்றிற்கு அனுமதி என பல தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில் தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பேட்டியளித்த சம்மேளனத்தின் மாநில செயலாளர் தர்மராஜ், ” டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் இந்த சூழலில் நாளொன்றுக்கு சராசரியாக 400 கிலோ மீட்டர் ஓட்டினால் மட்டுமே கணிசமான வருவாயை பெற முடியும், அதேபோல் 100 விழுக்காடு பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.