பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் 4 வாரத்தில் மாற்றமான தனது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றன. அந்தவகையில் பிக் பாஸ் சீசன்3 இல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தர்ஷன். இவரது நடிப்பில் தற்போது கூகுள் குட்டப்பன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கும் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் தான் 4 வாரத்தில் 8 கிலோ உடல் எடையை குறைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் 4 வாரத்தில் இப்படி ஒரு மாற்றமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CT4XUZmBpJV/?utm_medium=copy_link