தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் லேடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது மண்ணுக்கடியில் அமைந்துள்ளது. இந்த தனி உலகமானது சுரங்கப்பாதையில் இருப்பது தான் மிகவும் சிறப்பு. இந்த சுரங்கப்பாதையில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்ததாகவும் அங்கு தட்பவெப்ப நிலை சரியாக இல்லாததால் மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டதன் காரணமாகவும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1915-ம் ஆண்டு சுரங்கப்பாதை பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக அளவிலான மக்கள் அங்கு தங்கியுள்ளனர்.
இங்கு குளிர் மற்றும் வெயில் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்நிலையில் சுரங்கப்பாதை கிராமத்தில் அனைத்து விதமான ஆடம்பரமான பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இணையதள வசதியும் இருக்கிறதாம். இதனையடுத்து வணிக வளாகங்கள், தேவாலயங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல்கள் என அனைத்து விதமான வசதிகளும் அந்த கிராமத்தில் இருக்கிறது. மேலும் பல ஹாலிவுட் படங்களும் இந்த சுரங்கப்பாதை கிராமத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.