காதுக்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் வரைபடம் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இரு பாலினமாக பிரித்து, அதற்கு கண், காது, மூக்கு, கை, கால் வைத்து அழகாக படைத்திருக்கிறார். இதில் ஆணும், பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகி அந்த கருவானது ஒரு புது மனிதனாக உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. இவ்வாறு கருவில் இருக்கும் குழந்தையானது முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை ஒவ்வொரு படியாக வளர்ச்சி அடைந்து வரும். முதல் மாதத்தில் அந்தக் கருவானது வளர்ந்து அதற்கு முதலில் இதயத்துடிப்பு உருவாகும். பின்னர் அப்படி படிப்படியாக வளர்ந்து ஆறாவது மாதத்தில் இருந்து முழுமையாக வளர்ச்சி அடைகிறது.
இந்த வளர்ச்சியை குழந்தை பெற்றெடுக்கும் தாய் ஸ்கேன் பரிசோதனையில் பார்க்கும்போது குழந்தையின் அழகை பார்த்து மகிழ்ச்சியில் பூரிப்படைவார். இப்படி இருக்கையில் மனிதர்களின் காதிலேயே அந்தக் கருவில் இருக்கும் குழந்தையானது இருப்பதுபோன்று ஒரு வரைபடத்தை நெட்டிசன்கள் உருவாக்கியுள்ளனர். இது பார்ப்பதற்கு குழந்தை வடிவில் மிகவும் அழகாக இருக்கிறது. காதின் மேல் இருக்கும் இந்த குழந்தையின் வரைபடத்தை பார்ப்போருக்கு காதுக்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று வியப்படைய வைக்கிறது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது