மகள் பிரசவத்திற்காக சென்றபோது மாமியார், மருமகனுடன் குடும்பம் நடத்திய சம்பவம் மகளின் வாழ்க்கை சீரழித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெஸ் ஆல்ட்ரிட்ஜ் என்ற பெண் மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்து வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்றவுடன் அவர் தனது கணவரையும்,தன் அம்மாவையும் காணாமல் தேடி இருக்கிறார். அதன்பின் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனென்றால் தன் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது தன் தாயாரும் தன் கணவரும் தம்பதிகளாக சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்தி உள்ளார்கள் என்று தெரியவந்தது. இதனால் மனம் நொந்த ஜெஸ் ஆல்ட்ரிட்ஜ், ஒரு பாட்டிக்கு புதிதாகப் பிறந்த குழந்தையின் மீது காதல் ஏற்படும். ஆனால் இங்கு தந்தையுடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இது பச்சை துரோகம் என்று கதறி அழுதார்.