டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த மே மாதம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மண்டோலி சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு கேன் குடிநீர், மெத்தை, மற்றும் மசாஜ் போன்ற வசதிகள் சிறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திகார் ஜெயலின் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.