Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! சி.எம் மேல இவளோ பாசமா… சமீப காலமாக ஸ்டாலினை பார்த்து…! மக்கள் கேட்கும் கேள்வி… சொல்லி மகிழ்ந்த முதல்வர்

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சில பேர் இப்போ சமீப காலமாக உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது மக்கள் என் மீது, இந்த அரசின் மீது எந்த அளவிற்கு அன்போடு பாசத்தோடு, நம்பிக்கையோடு, இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறேன். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பல்வேறு சாதனைகளை தமிழக மக்களுக்காக இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக இந்த மதுரையை  சுற்றி மட்டும் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பெயரால் ஒரு மாபெரும் நூலகம், 70% முடிந்துவிட்டது விரைவில் அது திறக்கப்படவிருக்கிறது. அதேபோல தமிழர்கள் பாரம்பரிய விழாவாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு அரங்கம், அந்த ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் அமையப்போகிறது என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன்.

அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பணியில் தொடங்கி நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மதுரை எல்லையில் கீழடி பண்பாட்டு அரங்கம் அமையவிருக்கிறது, சென்னை போலவே மதுரைக்கும் பெருநகர் வளர்ச்சி குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. மதுரையை சுற்றிலும் சுற்று வட்டார சாலை அமைக்கப்பட இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் அருகில் பல அடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்பட்டு, நேற்று மாலை நான் திறந்து வைத்தேன்.

அதேபோல தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டிருக்கின்ற மாநாட்டு மையம்,  அதுவும் திறந்து வைத்திருக்கிறேன், விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி மதுரையில் மட்டும் பல்வேறு பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான பணிகள் இந்த அரசின் சார்பில் நடந்து கொண்டிருக்கிறது. என்றைக்கு நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றோமோ அன்றிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல், நான் மட்டுமல்ல அமைச்சர்கள் மட்டுமல்ல, எங்களுக்கு துணை நின்று பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேரும் இன்றைக்கு ஓயாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |