தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின் விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் ஒரு சிலர்.
அதாவது நடிகர் ராம்சரணின் பழைய புகைப்படம் ஒன்றினை தற்போது வலைதளத்தில் பகிர்ந்து அவர் Richard mile பிராண்ட் வாட்ச்சை கட்டியிருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இந்த வாட்சின் விலை சுமார் 2 கோடி ரூபாய் ஆகும். மேலும் நடிகை ராம்சரண் மற்றும் அவருடைய மனைவி உபசானா ஆகியோருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.