Categories
அரசியல்

இதுலாம் நியாயமா…! ரூ.2,500 சொல்லிட்டு ரூ.30 தாறீங்க..  சொன்னதை கொடுங்க முதல்வரே… !!

தமிழக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது என்ன அறிவித்து இருக்கிறார் என்று சொன்னால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு 30 ரூபாய் அறிவித்திருக்கிறார், பொது ரகத்திற்கு 50 ரூபாய் அறிவித்திருக்கிறார். இதுதான் இப்பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு குவிண்டாலுக்கு 2500. ஆனால் வழங்கப்பட்டது 30 ரூபாய், 50 ரூபாய். எப்படி விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல கரும்பிற்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்தவுடன் டன்னிற்கு 4,000 ரூபாய் கொடுப்பதாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார் முன்னேற்ற கழக தலைவரும், கட்சியை சேர்ந்தவர்களும் ஆனால் கொடுக்கப்பட்டது 150 ரூபாய் உயர்த்தி கொடுக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.  எப்படி எல்லாம் விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை பெற்றார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் பொய்யான அறிவிப்பை வெளியிடுவார் பொய்யான வாக்குறுதிகளை தருவார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை கைவிட்டு விடுவார்கள்.

கடந்த காலத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்திலே 2006 – 2011 திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி வருவதற்கு முன்பாக நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இடம் கொடுப்பதாக சொன்னார்கள். எத்தனை பேருக்கு நிலம் கொடுத்தார்கள் நிலம் கொடுக்காமல் இருந்தாலும் பரவால்ல. இருக்கின்ற நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே பரவாயில்லை திமுக ஆட்சியில்.

திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் எல்லாம் அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கினார்கள். அதற்காக தான் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அப்பாவி மக்கள் இடத்தில் இருந்து பறிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் யாரிடமிருந்து பிடுங்கப்பட்டதோ அவர்களிடம் இருந்து பிடுங்கி உரியவர்களிடம் கொடுத்த அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம் என விமர்சித்தார்.

Categories

Tech |