Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 6 சீட்டுக்கே இப்படியா ? தெறிக்க விடும் சிறுத்தைகள்…. உற்சாகத்தில் திருமா …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் தொகுதி பங்கீடு செய்வதிலும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

இதில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் ஆறு தொகுதி என்பதையும் பொருட்படுத்தாமல் அதை கொண்டாடி வருகின்றனர். மேலும் டுவிட்டரில் #MyVoteForVCK என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுத்தைகள் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

 

 

Categories

Tech |