நடிகை நமீதாவின் 17 வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவிற்கு கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. இதை தொடர்ந்து அஜீத், விஜய், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த அவர் ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
இதை தொடர்ந்து நீண்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நமீதா தனது 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் நம்ம நமீதாவா இது என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/p/CTT_acMP4ha/