சித்தி 2 சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது.
சித்தி சீரியல் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது சித்தி 2 ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இளம் நடிகை ப்ரீத்தி ஷர்மாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரீத்தி ஷர்மா அவ்வபோது தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் பலரும் சித்தி 2 சீரியல் நடிகை இது. ஆள் அடையாளமே தெரியலையே என்று ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.