Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் VS ரஜினி…. ”ட்வீட்டரில் கடும் யுத்தம்”…. மோதிக்கொள்ளும் DMK vs BJP …!!

ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து  திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.

சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்டவை வலியுறுத்தின.

ரஜினி துக்ளக் க்கான பட முடிவு

மேலும் ரஜினிக்கு எதிராக பல்வேறு காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டு போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இதுகுறித்து நேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தகுந்த ஆதாரத்துடன் தன்னுடைய கருத்து விளக்கமளித்தார் .

ரஜினி துக்ளக் க்கான பட முடிவு

அதில் , தாம் ஊடகங்களில் வந்ததையே கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இல்லாத விஷயம் ஒன்றும் நான் சொல்ல, கற்பனையாக ஒன்னும் சொல்லல , மத்தவங்க சொன்னதுதான் நான் சொல்லி இருக்கேன். இது  சர்ச்சையாகி இருக்கிறது , இதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும் ,  வருத்தம் தெரிவிக்கனும் என்று சொல்றாங்க. சாரி நான் மன்னிப்பு கேட்க முடியாது வருத்தம் தெரிவிக்க முடியாது என்று ரஜினி அதிரடியாக தெரிவித்தார்.

ரஜினி பெரியார் க்கான பட முடிவு

ரஜினியின் இந்த செய்தியாளர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு  ரஜினியின் பேட்டிக்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. ரஜினியின்  கருத்துக்கு ஆதரவாக #மன்னிப்பு கேட்க முடியாது ,  #ரஜினிகாந்த்  , #Rajinikanth , , #இந்து_விரோதி_திமுக என்றும் , ரஜினிக்கு எதிராக #சூப்பர்சங்கிரஜினி , #ரஜினிஒருமெண்டல் ,#Periyar  என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் ரஜினி பாஜகவின் சாயல் என்று கூறி வந்தது நிரூபணமாகி விட்டது. அவர் பாஜகவின் குரலாக பேசி வருகின்றார். இதை திமுக அடிக்கடி விமர்சிப்பதால் பாஜக ஆதரவாளர்களும்ம் , ரஜினி ஆதரவாளர்களும் என்று திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

 

ஒரு கட்டத்தில் இந்த மோதல் எல்லை கடந்து செல்ல தொடங்கியது. ஆம் அதன் வார்த்தைகள் வரம்பை மீறி பிரதி பலித்தன. இது ரஜினிக்கு ஆதரவாக பாஜக களமிறங்கியதை உறுதி படுத்தியது. பெரியாரை அடிக்கடி விமர்சனம்  செய்து பாஜகவினர் பேசுவார்கள். அதே போல் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா உயர்நீதிமன்றத்தை கடுமையாக பேசிய வீடியோ தமிழகம் முழுவதும் சர்சையை ஏற்படுத்தியது.

 

 

அப்படி இந்த ட்வீட்_டர் யுத்தமும் பாஜக சார்பில் H.ராஜா ஸ்டைலில் சென்று கொண்டு இருக்கின்றது. ரஜினியை பெரியாரை பற்றி சர்சியாக பேசியது தவறு என்றும் , மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் திராவிட கழகம் , திமுகவினர் வாதமாக இருந்த நிலையில் தற்போது #மன்னிப்பாவது_மயிராவது  , #பெரியாராவது_மயிராவது   என்று வார்த்தை போர் நடைபெற்று ட்வீட்_டரில் ட்ரெண்டாகி வருகின்றது.

 

 

Categories

Tech |