சோனியா அகர்வால் நீல நிற கவுனில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்தார். தற்போது இவர் படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
https://www.instagram.com/p/CdpNfv4JBi6/
இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனியா அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் நீல நிற கவுனில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.