சேலம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளிப் பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த மாதிரி பரிசோதனையை எடுத்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்று ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் இந்த மாதிரி சோதனை நடைபெற்றது.
இது சேலம் அரசு மருத்துமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் போது ஊழியர்களின் அலட்சியப் போக்கால் ரத்த மாதிரிகள் கொத்தாம்பாடி பகுதி சாலையில் கிடந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.