‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் விவகாரம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் ரஷியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கபட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏறபட்டுள்ளது. ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள துலா என்ற நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்ட் ஒதுக்கி சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதில் பணி செய்த இளம் நர்ஸ் தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது கோடை வெயில் ரஷ்யாவிலும் வாட்டி எடுத்து வருகின்றது. இதன் காரணமாக அந்த கொரோனா வார்டில் பணியாற்றிய இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதற்க்கு மேல் பணிபுரிவதற்கான பி.பி.இ. என்ற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட செவிலியர் விதிமுறலை செய்துவிட்டதாக அந்த பிராந்திய சுகாதாரதுறை கண்டனம் தெரிவித்தது.
ஒருபக்கம் சர்சைகளும் பரபரப்பும் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது. சக செவிலியர்களும், மருத்துவர்களும் இளம் நர்ஸ் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 23 வயதான நர்ஸ் நடியாவின் சர்சை புகைப்படம் வைரலாகியதை பார்த்த பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரியின் தலைவர் அனஸ்தேசியா யகுஷேவா, செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாடலாக வேண்டும். அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.