Categories
தேசிய செய்திகள்

ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது…. அதுவும் பள்ளியில்…. ஒழுங்கீன நடவடிக்கையால் கொந்தளித்த பெற்றோர்…..!!!!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் மது விருந்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ படி ஆசிரியர் மது விருந்து கொடுத்ததோடு குடிபோதையில் பள்ளி வளாகத்தில் படுத்து கிடந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மாவட்ட கல்வி அதிகாரி கூறியுள்ளார்.

அதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியரின் நடத்தை மற்றும் செயல் குறித்து வட்டார கல்வி அதிகாரி மற்றும் துணை கோட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையை மையமாக வைத்து தான் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே  ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |