தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் போனி கபூரை திருமணம் செய்த நிலையில், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஏற்ற 2 மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு படங்களை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி கடந்த 2012-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை கௌரி ஷிண்டே தயாரிக்க, நித்யா மேனன் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் ரிலீசாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆன நிலையில், ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை என்றுமே மறக்க முடியாது. ஏனெனில் படப்பிடிப்பில் என்னுடைய அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
நான் அந்த படத்தில் சிறிது நேரமே தோன்றியிருப்பேன். ஒரு நாள் என்னுடைய அம்மா கண்டிப்பாக நீ கௌரி ஷிண்டேவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார். என் அம்மாவின் ஆசையை போன்று நானும் கௌரி ஷிண்டேவும் விரைவில் இணைந்து பணியாற்றுவோம். மேலும் அந்த அளவுக்கு கௌரி ஷிண்டே எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார் என்று கூறினார்.