சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் வரும் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் 20 வயதுடைய நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் “கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை” என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முறையாக தொலைக்காட்சிக்குள் நுழைந்தார். இதைத்தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான “திருமணம்” என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு பிரீத்தி ஷர்மாவிற்க்கு சித்தி-2 சீரியலில் வாய்ப்பு கிடைத்ததால் “திருமணம்” சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் பிசியாக இருந்தாலும் தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருக்கிறார். மேலும் இவருக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது.