தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பஞ்சாபில் நடந்த வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உண்மை சம்பவமாக எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த தகவல் பொய் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகர் அஜித் மற்றும் அவருடைய குழு தொடர்ந்து வங்கிகளில் கொள்ளை அடிக்கிறது. இவர்கள் எதற்காக வங்கியை கொள்ளை அடிக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.