Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டன்” படத்தின் கதை இதுவா..? நிச்சயம் வெற்றி பெறும்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!!

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன் படத்தின் கதை லீக்கானது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு பிரபல இயக்குனர் சங்கரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து பிரச்சனையை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துக்கொண்ட நடிகர் வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நாய் சேகர் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் வடிவேலு பணக்காரர்கள் வீட்டில் வளர்ந்து வரும் நாயை திருடி வந்து விடுகிறார்.

மீண்டும் அந்த பணக்காரர்கள் வடிவேலுவிடம் வந்து புதிய நாயை வாங்குவது போலவும் அதற்கு வடிவேலு அவர்களிடம் பேரம் பேசுவதும் தான் இந்த கதை களம் என்று தெரியவந்துள்ளது. இக்கதையை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று கூறிவருகின்றனர்.

Categories

Tech |