Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தின் கதை இதுதானா…..? இணையத்தில் கசிந்த தகவல்…..!!!

‘விக்ரம்’ படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

first look of Kamal's Vikram movie has been released. || வீரமே வாகையைச்  சூடும்...வெளியானது கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்...!

ஜூன் 3ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ஜெயில் கைதியாக விஜய் சேதுபதி இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வருவதற்கு பகத் பாசிலிக்கு வேலை கொடுக்கப்படுகிறது. மேலும் கமல்ஹாசனும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். விரைவில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

Categories

Tech |